தமிழக அரசின் பட்ஜெட் 2020-21 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கியது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம்.
கல்வித்துறைக்கு 34, 841 கோடி ரூபாய் ஒதுக்கிடு.
மின்சாரத்துறைக்கு 20, 115 கோடி ரூபாய் ஒதுக்கிடு.
வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு 15, 863 கோடி ரூபாய் ஒதுக்கிடு.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கிடு.
தொல்லியல் துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அம்மா உணவகத் திட்டம்:
அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
தமிழக அரசு ஊழியர்களுக்கான நிதி:
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு
ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு
கல்வித் துறை:
பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூபாய் 34,181 கோடி.
உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி.
முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகை தொடர ரூ506 கோடி ஒதுக்கீடு
பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு
அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியை அரசே ஏற்கும்- கடலூர் மாவட்டத்துக்கான அரசு கல்லூரியாக செயல்படும்.
சுகாதாரத் துறை:
சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி.
உள்ளாட்சி & நகராட்சி நிதி ஒதுக்கீடு விவரங்கள்:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 6,754 கோடி. நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூபாய் 18,540 கோடி.
சுகாதாரத் துறை:
சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி
தமிழக காவல்துறை:
காவல்துறைக்கு – 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நீதி நிர்வாகம்:
நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பொருளாதார வளர்ச்சி:
தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு
தமிழக கோயில், தேவாலயம் & மசூதி நிதி ஒதுக்கீடு:
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு. 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்
தமிழக மீன்வளத்துறை:
மீன்வளத்துறைக்கு ரூ.1129.85 கோடி ஒதுக்கீடு.
4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
உணவு மானியம்:
உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு.
பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்:
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் – ஓ.பி.எஸ் அறிவிப்பு.
சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கும்.
தமிழ் வளர்ச்சி துறை:
தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு:
வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அரசு தமிழ்நாடு உழவர் உற்பத்திக் கொள்கை மூலம் மேலும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
உழவர்- அதிகாரி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
கரும்பு விவசாயம் நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு 75 கோடி ஒதுக்கீடு
பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு 1700 கோடி ஒதுக்கீடு
திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும்
தென் மாவட்டங்களில் 70 கோடி ருபாய் செலவில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
உழவர் சந்தைகள், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகரிக்கப்படும். தென்காசியில் எழுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்
நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும். இதற்கான மானியங்கள் அளிக்கப்படும்.
திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும்.
திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும் 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்
8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை. சேலம், கடலூர், விழுப்புரம், மதுரையில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்
கால் நடைத்துறை:
கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு
விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், கோழி வழங்கும் திட்டம், தீவன அபிவிருத்தி திட்டம் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன.
நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் மூலம் விவசாயிகளின் இடத்திலேயே கால்நடை மருத்துவ சேவையை அரசு வழங்கும்.,
சேலம் தலைவாசலில், கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு மாடுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
மின்சார துறை:
மின்சார துறைக்கு 20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு..
போக்குவரத்து துறை:
அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு
சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ரூ.6448 கோடி ஒதுக்கீடு
3 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும். நாகை ஆற்காட்டுத்துறை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் அவை அமைக்கப்படும்
நீர்வளத்துறை:
நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
4,825 பணிகள், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கிழ் 902.35 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன். இவற்றுகாக 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிடத்தக்க ஏரிகள் மீட்டெடுக்கப்படும்.
தமிழக அரசின் கடன்:
தமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடி
சேலத்தில் தொழிற்பேட்டை:
சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும்.
தமிழக அரசின் பட்ஜெட்(Tamil Nadu Budget) 2020-21 : Download PDF