TNEB Assessor & Junior Assistant Recruitment Notification, Exam Patterns & Syllabus 2020
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 8 ஜனவரி 2020 தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கணக்கீட்டாளர் & & இளநிலை உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் செய்யப்படுகிறது. மொத்தம் 1, 300 + 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை கவனமாக வாசித்து வரவும். தமிழ்நாடு மின்பகிர்மாணக் கழகத்தில் (TNEB Assessor & Junior Assistance Recruitment 2020) கணக்கீட்டாளர் & இளநிலை உதவியாளர் பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மூலம் பணிக்கு (TNEB Assessor & Junior Assistant Jobs) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNEB Assessor Junior Assistance Recruitment Notification Syllabus 2020 Download PDF
முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 8 ஜனவரி 2020
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 10 ஜனவரி 2020
இளநிலை உதவியாளர் பணி(Junior Assistant Exam)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9 பிப்ரவரி 2020
கணக்கீட்டாளர் (TNEB Assessor Exam)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 பிப்ரவரி 2020
இளநிலை உதவியாளர் பணி (Last Date OF Junior Assistant Exam Fees)
தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 12 மார்ச் 2020
கணக்கீட்டாளர் பணி (Last Date of TNEB Assessor Exam Fees)
தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 13 பிப்ரவரி 2020
தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
வயது வரம்பு ( Age Limits):
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினராக இருந்தால் 32 வயது வரையிலும்,
ஆதி திராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர், ப.வ மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளாக இருந்தால் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி (Exam Qualification):
கணக்கீட்டாளர் பணி:
கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருந்தால் போதும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அளவீடு கருவியின் மூலம் கணக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.
இளநிலை உதவியாளர் பணி:
இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிக்கு விண்ணப்பிக்குமு் விண்ணப்பதாரர்கள், இளங்களை வணிகவியல் படித்திருக்க வேண்டும். அதாவது பி.காம் (B.Com) முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்ககும் முறை (How to Apply Online for TNEB Assessor & Junior Assistant Exam 2020):
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து பிப்ரவரி 09 (இளநிலை உதவியாளர்) மற்றும் பிப்ரவரி 10-ஆம் (கணக்கீட்டாளர்) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
TNEB Assessor & Junior Assistant official Notification 2020:
TN EB Assessor (கணக்கீட்டாளர் ) Exam Notification Tamil & English 2020: Download PDF
TN EB Junior Assistant (இளநிலை உதவியாளர்) Exam Notification 2020: Download PDF
TNEB Assessor & Junior Assistant Exams Syllabus & Pattern 2020:
TN EB Assessor (கணக்கீட்டாளர் ) Exam Syllabus 2020: Download PDF
TN EB Junior Assistant (இளநிலை உதவியாளர்) Exam Syllabus 2020: Download PDF