டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு 2019 அறிவிப்பு எப்போது?

tnpsc-group-2a-notification-2019-tamil-pdf

தமிழ்நாடு அரசுப்பணிகளில் நிதித்துறை, சட்டத்துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர், பெர்சனல் கிளார்க், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2- (TNPSC Group IIA) தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஒரே ஒரு எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

tnpsc-group-2a-exam-notification-2019-tamil

                 TNPSC Group 2A Notification 2019 Tamil

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2A பணிகளின் பெயர்கள்:

 • நிதித்துறை,
 • சட்டத்துறை,
 • வருவாய்த்துறை,
 • சிறைத்துறை,
 • காவல்துறை,
 • சுகாதாரத்துறை,
 • போக்குவரத்துத் துறை,
 • பதிவுத்துறை

உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த பணியிடங்கள் குறித்த விபரங்கள், விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 முக்கிய தேதிகள்:

குரூப் 2A தேர்வு அறிவிப்பு வெளியான தேதி – விரைவில் அறிவிக்கப்படும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதி – விரைவில் அறிவிக்கப்படும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – விரைவில் அறிவிக்கப்படும்

காலியிடங்கள்: விரைவில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online method)

விண்ணப்பக் கட்டணம்: விரைவில் அறிவிக்கப்படும்

தேர்வு நடைபெறும்  நாள் : விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப் பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Education Qualification:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு, இளநிலை பட்டப் படிப்பை படித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்.விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். இந்தப் பணிகளில் 20 சதவீதப் பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நிதித்துறையில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

சட்டம் மற்றும் நிதித்துறை அல்லாத பிற துறைகள், டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சட்டப்பேரவை போன்றவற்றில் பெர்சனல் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வருவாய்த்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ, சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்தவர்களும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.லிட். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சிறைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளர் துறை, நெடுஞ்சாலைத் துறை, வரலாற்று ஆவணத்துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: Age Limits:

அனைத்துப்பணிகளுக்கும்

 • குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
 • பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • பொதுப்பிரிவினர் அல்லாத பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பின், அவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. வேறு அரசு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படாத நிலையில் டான்சி நிறுவனத்தில் ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் ஊழியர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு எப்படி இருக்கும்? How to Crack TNPSC Group 2A Exam?

இதற்கான எழுத்துத்தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவு ஜெனரல் ஸ்டடீஸ் ஆகும். இதில் பட்டப்படிப்புத் தரத்தில், ஜெனரல் ஸ்டடிஸ் பிரிவில் 75 கேள்விகள், எஸ்எஸ்எல்சி தரத்தில் மென்டல் எபிலிட்டி பிரிவில் 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

ஜெனரல் ஸ்டடிஸில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள்(TNPSC Current Affairs), புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகம், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டேட்டா கலெக்ஷன், டேட்டா டேபிள்ஸ், கிராப்ஸ், அனலிட்டிக்கல் இட்னர்பிரட்டேஷன் டேட்டா, சிம்ப்ளிபிக்கேஷன், சதவீதம், நேரம், தூரம், ரீச னிங், வரைபடம் உள்பட பல்வேறு மென்டல் எபிலிட்டி பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாவது பிரிவு எஸ்எஸ்எல்சி தரத்தில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகும். இதில் 100 கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்ப் பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், அவர்களின் தமிழ்த் தொண்டு ஆகிய பாடப்பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. கேள்விகள் அனைத்தும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 விண்ணப்பிப்பது எப்படி? How to Apply for TNPSC Group 2A Exam?

 இத்தேர்வு எழுத ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிகளுக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் 125 (அதாவது தேர்வுக் கட்டணம் ரூ.75, விண்ணப்பக் கட்டணம் ரூ.50). ஒரு முறை பதிவு முறையில் ஏற்கனவே, ரூ. 50 செலுத்தி, விண்ணப்பித்து பதிவு எண் பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.

தேர்வு நடைபெற இருப்பதற்கு, ஒருவாரம் முன்னதாக இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை (TNPSC Group 2A Hall Ticket) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தகுதிகள் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்தும் முறை குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

 

TNPSC Group 2A Exam Notification 2019/டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: விரைவில் அறிவிக்கப்படும்

Online Apply for TNPSC Group 2A Exam /ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி:

விரைவில் அறிவிக்கப்படும்

TNPSC Group 2A Writtern Exam Date/எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:

விரைவில் அறிவிக்கப்படும்