TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பு:
தமிழகக்தில் உள்ள அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குரூப் 4 பணி தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 14ம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்காக வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்பதற்கான வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வை எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகிய தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறும். 100 மதிப்பெண்கள் தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிப்பாடத்தில் இருந்தும் மீதமுள்ள 100 மதிப்பெண்ணில் 75 மதிப்பெண் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும் மீதம் உள்ள 25 கேள்விகள் திறனறி பகுதியில் இருந்தும் கேட்கப்படும் . இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு வரும் 14ம் தேதி ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
பணிகளின் பெயர்கள்:
கிராம நிர்வாக அலுவலர் ( VAO)
நில அளவையர்
இளநிலை உதவியாளர் (Junior Assistant)
பில் கலெக்டர் (Bill Collector)
தட்டச்சர் (Typist)
தட்டச்சு செய்பவர் (Typist) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்த பணியிடங்கள் குறித்த விபரங்கள், ஜூன் 14ம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான தேதி – ஜூன் 07,2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் தேதி – ஜூன் 14, 2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
காலியிடங்கள்: விரைவில் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: விரைவில் அறிவிக்கப்படும்
தேர்வு நடைபெறும் நாள் : செப்டம்பர் 01, 2019.
தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப் பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி முதல் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exams.in என்ற இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு ஏற்ப இந்த தேர்ச்சி அளவீடு மாறுபடும். இந்தாண்டுக்கான குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பு ஜூன் 14-ம்தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு 2019: Click Here
TNPSC Group 4 VAO Exam Notification 2019 in English : Click Here
How to Apply for TNPSC Group IV (டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு) Exam: Click Here